TNPSC-இல் வரவிருக்கும் சில சீர்திருத்தங்கள்

தேர்வாணையத்தின் புதிய தலைவராக நடராஜ் பதவி  ஏற்றதும் அறிவித்த முக்கிய சீர்திருத்தங்கள்.

* தேர்வு பற்றிய வெளிப்படையான நிர்வாகம்   அமைக்கப்படும்.

* தேர்வு முடிந்த பிறகு வினாக்களுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப் படும். விடைகளில் ஆட்சேபனை இருந்தால் யாரும் தெரிவிக்கலாம். இந்த தகவல் தெரிவிக்க 7 நாட்கள் முதல் 10 நாட்கள் காலஅவகாசம் கொடுக்கப்படும். அதன் பின்னர் நிபுணர்குழு அமைத்து விடைகள் சரி என்று தெரிந்த பின்னர் தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். அதன் பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.

* தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் விடைத்தாள்களை விரும்பிய தேர்வர்கள் பார்வையிடலாம்.

* தேர்வுகளுக்கு உரிய தேர்வு முறை, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்படும்.

* அரசுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப் பொறுப்புகளை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்களில் உரிய மாற்றங்களும், தேர்வர்களின் பகுத்தாய்வு திறனை ஆராயும் வகையிலும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.

* தேர்வுக்காக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.

* எந்த தேதியில் எந்த தேர்வு நடத்தப்படும், எந்த தேதியில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும், எந்த தேதியில் முடிவு அறிவிக்கப்படும் என்ற அனைத்து விவரங்களும் கால அட்டவணையாக தயாரித்து வெளியிடப்படும்.

* நேர்முகத் தேர்வு வெப்கேமரா மூலம் பதிவு செய்யப்படும். யாருக்காவது சந்தேகம் வந்தால் அவர்கள் வந்து பதில் அளித்ததை காணமுடியும்.

* குரூப்-I தேர்வு, குரூப்-II தேர்வுகளுக்கு ஒரே கல்வித்தகுதிதான். எனவே அவர்கள் ஒருமுறை தேர்வு எழுத விண்ணப்பித்தால் போதும். அவர்களுக்கு ஒரு அடையாள குறியீட்டு எண் கொடுக்கப்படும். அதை  அவர்கள் பத்திரமாக வைத்திருந்தால் மறுமுறை விண்ணப்பிக்க தேவையில்லை. அந்த குறீயீட்டு எண்ணை தெரிவித்து தேர்வு எழுத உள்ளதை தெரிவித்தால் போதும். அவர்கள் தேர்வு எழுதலாம்.

* தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டுப்போடும்போது வெப்கேமரா வைத்து கண்காணிப்பது போல அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வின்போது தேர்வு அறைகளில் வெப்கேமரா பொருத்தப்படும். 

* தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். கணினி மயமாக்கப்படும்.

இவையெல்லாம் தேர்வாணையத்தின் தலைவராக நடராஜ் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் அறிவித்தார்.

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற